தர்புகா சிவா இயக்கிய 'முதல் நீ முடிவும் நீ' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தர்புகா சிவா இயக்குநராக அறிமுகமாகும் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான ‘ராஜதந்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. பின்னர், அதே ஆண்டு வெளியான ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். சில படங்களில் நடித்தாலும், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘நிமிர்’, ‘ராக்கி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இதில் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து தர்புகா சிவா முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படத்தை ஒரு இயக்கவும் செய்தார். சமீர் பரத் ராம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பொறுப்பு மட்டுமன்றி, தர்புகா சிவா இப்படத்தில் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்

'முதல் நீ முடிவும் நீ' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டே முடிந்துவிட்டாலும் இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இப்படத்தில் அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் வரும் ஜனவரி 21, 2022 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்