55-வது பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்து மழையில் ரஹ்மான்

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் தொடர்பான ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ:

ஹரீஷ் கல்யாண்: எங்கள் மேஸ்ட்ரோ ஏ.ஆர்ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இசையால் எங்கள் வாழ்வை மேன்மையாக்கி, ஒரு மனிதராக எங்களுக்கு உத்வேகம் தரும் உங்களுக்கு நன்றிகள்.

அனிருத் : அன்புள்ள ரஹ்மான் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். லவ் யூ

ஆர்யா: எங்கள் ஆளுமை ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு சிறப்பாக அமையட்டும்.

மகேஷ் பாபு: இசை ஆளுமை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

மாதுரி தீக்சித்: ஆளுமை ரஹ்மான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இசையின் மூலம் நீங்கள் பல இதயங்களைத் தொட்டுள்ளீர்கள். உங்கள் ஒவ்வொரு படைப்பும் கலையின் தலைசிறந்த மாஸ்டர்பீஸ். நீங்கள் எப்போதும் போல் பிரகாசமாய் சிறந்ததை செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்