லாரன்ஸ் நடிக்கும் ‘துர்கா’ படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்குகின்றனர்.
'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2', 'காஞ்சனா 3' எனத் தொடர்ச்சியாக ஹாரர் படங்களை இயக்கியவர் ராகவா லாரன்ஸ். இறுதியாக 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்கை 'லக்ஷ்மி' என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். தமிழில் தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஆண்டு புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'துர்கா' எனப் தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார். முதலில் இப்படத்தை லாரன்ஸே இயக்குவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்களான அன்பறிவ் இயக்கவுள்ளதாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இரட்டையர்களான அன்பு மற்றும் அறிவு இருவரும் அன்பறிவ் என்று அழைக்கப்படுகின்றனர். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘24’, ‘கைதி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றியுள்ள இவர்களுக்கு ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக சிறந்த ஸ்டன்ட் கலைஞர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
» கரோனா பரவல் எதிரொலி: ‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு?
» பாலஸ்தீன ஆதரவு பதிவு: 'ஹாரி பாட்டர்' நடிகைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!
தற்போது ‘துர்கா’ படம் மூலம் அன்பறிவ் இயக்குநர்களாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. படத்தில் பணிபுரியவுள்ள மற்ற நடிகர் நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago