பொங்கல் போட்டியிலிருந்து பின்வாங்குகிறதா ​‘ஆர்ஆர்ஆர்’?

By செய்திப்பிரிவு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இதற்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.

இந்நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்துப் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆந்திராவில் சினிமா டிக்கெட் கட்டணத்தை அம்மாநில அரசு குறைத்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்தச் சூழலில் இதனை மனதில் வைத்தே ‘ஆர்ஆர்ஆர்’ படம் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE