வலிமையாக திரும்பி வாருங்கள், சமந்தா என்று சினிமாவில் சாதிப்பதற்காக நடிகர் ராம் சரண் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
எஸ்.எஸ்.ராஜமொளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பட விளம்பர நிகழ்வுகளில் ஆர்ஆர்ஆர் படக்குழு பங்கேற்று வருகின்றது.
அவ்வாறு இருக்கையில், நேர்காணல் ஒன்றில் பங்கெடுத்த நடிகர் ராம் சரணிடம் நீங்கள் ஒருவேளை இன்று சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன கூறுவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ராம் சரண், ”சமந்தா வலிமையாக திரும்பி வாருங்கள்” என்று தெரிவித்தார்.
» ‘‘சவால்களை எதிர்கொண்டால் வேட்டையாடுபவராக மாறுவீர்கள்’’- பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
» விசாகம், அனுஷம், கேட்டை; இந்த வார நட்சத்திர பலன்கள்; ஜனவரி 2ம் தேதி வரை
இப்பதிவை சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் ராம்சரணின் இந்த வாழ்த்து வீடியோவை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ராம்சரண், சமந்தா இருவரும் இணைந்து நடித்த ரங்கஸ்தலம் திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.
முன்னதாக, நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago