சென்னைதான் எனக்குப் பள்ளிக்கூடம்: ராஜமௌலி

By செய்திப்பிரிவு

சென்னைதான் எனக்குப் பள்ளிக்கூடம் என்று 'ஆர்ஆர்ஆர்' பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த 'ஆர்ஆர்ஆர்' ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் அப்படக்குழுவினர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் ராஜமௌலி பேசும்போது, “எனக்குப் பள்ளிக்கூடம், கல்லூரி, ஆசிரியர், தலைமை ஆசிரியர் என எல்லாமே சென்னைதான். சென்னை மாநகராட்சிக்கு வணக்கம், தமிழ்த் தாய்க்கு வணக்கம்.

லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். 50 வயதைக் கடந்தும் என் தந்தை விஜயேந்திர பிரசாத் என்னைத் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார். இசையமைப்பாளர் மரகதமணி அண்ணாவுக்கும், என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதிரியான படைப்பை எடுக்க அர்ப்பணிப்பு, நட்பு அவசியம். அதனை அளித்த ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு என்னுடைய நன்றி.

ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இரு வேறு துருவங்கள். இந்த இரு துருவங்களும் படத்தில் பணிபுரிந்ததற்கு ஒரு இயக்குநராக மகிழ்ச்சி கொள்கிறேன். ஜனவரி 7ஆம் தேதி 'ஆர்ஆர்ஆர்' திரைக்கு வருகிறது. உங்களுக்கு 'பாகுபலி' பிடித்தால் 'ஆர்ஆர்ஆர்' பிடிக்கும். இது என்னுடைய வாக்கு" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE