மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய இயக்குநர் சேதுமாதவன் மறைவு 

By செய்திப்பிரிவு

பழம்பெரும் மலையாள இயக்குநர் சேதுமாதவன் காலமானார் அவருக்கு வயது 90.

1931 ஆம் ஆண்டு பிறந்த சேதுமாதவன் இயக்குநர் கே. ராம்நாத்தின் உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார். இவர் தவிர எல்.வி.பிரசாத், ஏ.எஸ்.ஏ.சாமி, சுந்தர் ராவ் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

‘ஓடையில் நின்னு’, ‘தாகம்’, ‘கூட்டுக் குடும்பம்’ உள்ளிட்ட 60 படங்களை சேதுமாதவன் இயக்கியுள்ளார். இதுவரை சிறந்த இயக்குநருக்கான நான்கு தேசிய விருதுகள் உட்பட பத்து தேசிய விருதுகளை சேதுமாதவன் பெற்றுள்ளார். 1962ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘கண்ணும் காரலும்’ என்ற படத்தில் நடிகர் கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

தமிழில் எம்.ஜிஆர். நடித்த ‘நாளை நமதே’, கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’, ‘மறுபக்கம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் ‘மறுபக்கம்’ சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று (டிச 24) அதிகாலை சேதுமாதவன் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்