புஷ்பா படத்திலிருந்து அல்லு அர்ஜூன், ராஷ்மிகா ரொமான்ஸ் சீன் நீக்கம்

By செய்திப்பிரிவு

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் காதல் காட்சி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட்.

இந்தப் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் வரவேற்பு சற்று குறைவாக இருப்பதாக கருத்து எழுந்தது. அதற்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா இடையே காரில் நடைபெறும் ரொமான்ஸ் காட்சியே காரணம் என்று கூறப்பட்டது. அந்தக் காட்சியின் வசனமும் வடிவமைப்பும் ஆபாசமாக இருந்ததால் அக்காட்சியை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், படம் 3 மணி நேரம் ஓடுவதால் சிறு தொய்வை ஏற்படுத்துவதாகவும் கருத்துகள் எழவே கார் சீனுடன் இன்னும் சில காட்சிகளும் நேரம் கருதி நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. நாளை டிசம்பர் 20 முதல் காட்சிகள் நீக்கப்பட்ட வெர்சன் திரைப்படம் திரையரங்குகளில் காட்சிக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

புஷ்பா 1 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இரண்டாம் பாகம் 2022லேயே வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்