அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் ‘சூர்யவன்ஷி’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ ஆகிய படங்களை முதல் நாள் வசூலில் பின்னுக்குத் தள்ளியது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான படங்களில் இதுவரை ‘சூர்யவன்ஷி’ படமே அதிக வசூல் சாதனை செய்த படமாகக் கருதப்பட்டு வந்தது. அப்படம் வெளியான முதல் நாளில் வசூலித்த தொகை ரூ.26.29 கோடி. இதனை கடந்த டிச.16 அன்று வெளியான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வெளியான முதல் நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்து முறியடித்திருந்தது. அத்துடன் இந்தியாவில்‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு முதல் நாளில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹாலிவுட் படமும் இதுவாகும்.
இந்நிலையில் நேற்று வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தைப் பின்னுக்குத் தள்ளி ரூ.45 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, ‘வக்கீல் சாப்’ உள்ளிட்ட படங்களையும் ‘புஷ்பா’ பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago