அஜித்துடனான அடுத்த படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''அஜித்தைப் பொறுத்தவரை இயக்குநர் அவரிடமிருந்து ஒரு விஷயம் வேண்டுமென்று நினைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார். எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு அவர் தயாராக இருப்பார். அவரது கதாபாத்திரத்தை எப்படி வேண்டுமானாலும் எழுதக்கூடிய சுதந்திரத்தையும் அவர் கொடுப்பார். இந்தப் படத்துக்காக அவர் முடிந்த அளவு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அவர் ஒரு குடும்பத்தில் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் தலைமுடிக்கும் கருப்புச் சாயம் பூசிக்கொள்ளச் சொன்னேன். முதலில் தயங்கியவர் பின்னர் கதைக்கு அது தேவை என்பதைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்.
எங்களது அடுத்த படம் இது போலல்லாமல், குறைவான ஆக்ஷன் நிறைய வசனங்கள் இருக்குமாறு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி அப்படம் பேசும்''.
இவ்வாறு ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago