சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தமிழின் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் சேரன். இவர் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இது தவிர்த்த மற்ற இயக்குநர்களின் பல்வேறு படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் மூன்றாவது சீசனிலும் கலந்துகொண்டார். கௌதம் கார்த்திக்குடன் சேரன் இணைந்து நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் சேரன் நாயகனாக நடிக்கிறார். இதில் சேரனுடன் ஸ்ரீபிரியங்கா, லால், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தை லக்ஷ்மி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (16.12.21) பூஜையுடன் தொடங்கியது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago