சினிமாவில் 19 ஆண்டுகள் நிறைவு: த்ரிஷா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து த்ரிஷா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர் த்ரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். அதன் பிறகு 2002ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி நேற்றோடு (டிச.14) 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டுப் பலரும் சமூக வலைதளங்களில் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா பகிர்ந்துள்ளதாவது:

''விடுமுறை தேவைப்படாத ஒரு வேலை தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். நான் அதைத் தேடிக் கொண்டேன். நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னோடு இருப்பவர்களை எப்போதும் நான் போகவிடமாட்டேன், நான் அனைவராலும்தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் மிகச்சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை''.

இவ்வாறு த்ரிஷா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்