ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடங்கியது.
சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு, மந்த்ரா பேடி, சுரபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடங்காதே'. நீண்ட நாட்களுக்கு முன்பாகவே இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. எனினிம் பல்வேறு சிக்கல்களால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ஒரு புதிய படத்தை சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இதில் நாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இயக்குநர் அமீர், கருணாஸ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ்பி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று (13.02.21) சென்னையில் தொடங்கியது. இதில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
» நடிகர் அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி
» இப்படி செய்வது நியாயமா? டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கடும் கண்டனம்
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago