'ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு இயக்குநர் சேரனுடன் மீண்டும் இணையவுள்ளதாக விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
2004-ம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த படம் 'ஆட்டோகிராஃப்'. இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'ஆட்டோகிராஃப்' இருந்து வருகிறது. இப்படத்தில் இயக்குநர் விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (டிச.12) இயக்குநர் சேரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பலரும் சமூக வலைதளங்களில் சேரனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
விஜய் மில்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில் சேரனுடன் இணைவது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மூலமாக ஒளிப்பதிவாளனாக எனக்கொரு அடையாளத்தை உருவாக்கி ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தின் வாயிலாக என் இயக்குநர் பயணத்தைத் தொடங்கி வைத்த இயக்குநர் சேரனுடன் என் அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பு விரைவில்”.
இவ்வாறு விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago