விக்கி கவுஷல் - கேத்ரீனா கைஃப் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரீனா கைஃப். இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக அறியப்படும் இவர் 2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகப் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அக்ஷய் குமாருடன்‘சூர்யவன்ஷி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான விக்கி கவுஷலை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கேத்ரீனா கைஃப் காதலித்து வருகிறார். கடந்த சில வாரங்களாகவே இருவரது திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தாலும் இருவர் தரப்புமே திருமணம் பற்றி மவுனம் காத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (09.12.21) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் விக்கி கவுஷல் - கேத்ரீனா கைஃப் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விக்கி கவுஷல், கேத்ரீனா கைஃப் இருவருமே தங்கள் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
11 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago