ட்விட்டரில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’

By செய்திப்பிரிவு

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்தனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாகவும் திகழ்ந்தது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேகுகளை ட்விட்டர் நிர்வாகம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக ‘மாஸ்டர்’ படத்தை ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படம் இடம்பெற்றுள்ளது. அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் இரண்டாம் இடத்திலும், சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் நான்காம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன. தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘வக்கீல் சாப்’ படம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்