வெள்ள பாதிப்பு: நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிதியுதவி

By செய்திப்பிரிவு

ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஆந்திராவின் நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சமீபத்தில் கடுமையான மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழந்தது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு உள்ளிட்டோர் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரபாஸ் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி நிதியுதவி செய்துள்ளார். பிரபாஸுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள 'ராதே ஷ்யாம்' படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்