சினிமாவில் 29 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்: மகன் சஞ்சய் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

விஜய் நாயகனாக அறிமுகமாகி 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது மகன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியாகி கடந்த டிச.4 அன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் #29YearsOfVIJAYSupremacy என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய், விஜய்க்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''29 ஆண்டுகளை நிறைவு செய்து பலருக்கும் உத்வேகமாக இருந்து வரும் உங்களுக்கு வாழ்த்துகள் அப்பா. உங்களோடு நான் கழிக்கும் ஒவ்வொரு தருணமும் ஒரு கற்றல் செயல்முறை. வரும் ஆண்டுகளில் உங்களுக்கு இன்னும் அதிக வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்''.

இவ்வாறு சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்