‘ஆன்டி இண்டியன்’ படத்தை திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை- ப்ளூ சட்டை மாறனை பாராட்டிய பாரதிராஜா 

By செய்திப்பிரிவு

‘ஆன்டி இண்டியன்’ படத்தை திட்டுவதற்கு ப்ளூ சட்டை மாறன் வாய்ப்பே தரவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்து வரும் டிசம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் சிறப்புக் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. அதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் படத்தைப் பார்த்தனர்.

படத்தைப் பார்த்த பாரதிராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறாரே. இவர் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன். படத்தையும் எடுத்து விட்டார்.

நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன். ஏதாவது ஒரு இடத்திலாவது அவருக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டார்.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்