'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்துக்காக நயன்தாரா மீண்டும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாகத் திரைப்படங்களில் நயன்தாராவுக்கு தீபா வெங்கட் டப்பிங் பேசுவது வழக்கம். ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார். அதற்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா மீண்டும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago