கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 9ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் ‘சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட’த்துக்கான பிரிவில் இந்தியா சார்பில் போட்டிடும் படங்களில் ‘ஜெய்பீம்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago