பலமுறை தள்ளிவைக்கப்பட்ட ‘தள்ளிப் போகாதே’ படம் தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தள்ளிப் போகாதே'. இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
ஏற்கெனவே பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் இப்படம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின்னர் டிசம்பர் 3 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
» ‘மாநகரம்’ இந்தி ரீமேக்: டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஜய் சேதுபதி
» இனிமேல் ‘தல’ என்று அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது இப்படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago