பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவசங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முன்வந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago