சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று (நவ.26) தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளும் மேலும் தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பாலியல் பலாத்காரமும் தொடர்ந்துகொண்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இதற்கொரு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் அதிகரித்திருக்கும் வேளையில்
ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பலாத்காரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது.
பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதல்வர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098 அனைத்துப்பெண்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்!
1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும்!
நன்றி முதல்வரே!
விட்றாதீங்க முதல்வரே!
இவ்வாறு பேரரசு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago