சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன என்று நடிகர் ராதா ரவி பேசியுள்ளார்.
ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆன்டி இண்டியன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவ.22) நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ராதா ரவி பேசியதாவது:
முன்பெல்லாம் படம் படம் எடுக்க வேண்டுமென்றால் லொக்கேஷன் பார்க்க வேண்டும், பணம் வேண்டும். ஆனால் இப்போது அதனுடன் புதிய பிரச்சினைகளும் சேர்ந்து கொள்கின்றன. இப்படி காட்சி வைத்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ, அவர்கள் என்ன சொல்வார்களோ என்று யோசிக்க வேண்டியுள்ளது. நான் மாறனிடம் இந்தப் படம் நிச்சயமாக ஓடும் என்று கூறினேன். சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன. மாறன் இந்த படத்தின் அற்புதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். 'ஆன்டி இண்டியன்' என்ற பெயரே பிரச்சினைக்குரிய ஒரு பெயர். திட்டுவதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. பிறரின் திட்டு தான் நம் வளர்ச்சி
» ஆண் குழந்தைக்கு தந்தையானார் ஆரவ் - சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து
» சிம்பு குறித்து எனக்கு சில ரகசியங்கள் தெரியும்: வெங்கட் பிரபு
இவ்வாறு ராதா ரவி பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago