சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ‘அயோத்தி’.ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் சசிகுமார், புகழ் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

படத்தை பற்றி இயக்குநர் மந்திர மூர்த்தி கூறும்போது, "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையைக் கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார்.

மேலும் “இந்த படத்திற்க்கு ‘அயோத்தி’ தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றும் கூறியுள்ளார்.

என் ஆர் ரகுநந்தன் இசையமைத்து வரும் இப்படத்திக்கு மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்