‘மாநாடு’ படத்துக்குத் தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் வெளியிடப்பட்ட புதிய ட்ரெய்லர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘மாநாடு’ படத்துக்குத் தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் சில வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago