ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்திப் படத்தில் நடிகர் மஹத் அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கில் நடிகராக இருப்பவர் மஹத் ராகவேந்திரா. நடிகர் சிலம்பரசனின் நெருங்கிய நண்பரான இவர் அவருடைய சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தவிர ‘மங்காத்தா’, ‘பிரியாணி’, ‘சென்னை 28 - 2’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘2030’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ‘ப்ளாஷ் பார்வேர்ட்’ வகையில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியில் சத்ராம் ரமணி இயக்கி வரும் ஒரு படத்தில் மஹத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக இந்தியில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இதுகுறித்து மஹத் கூறியிருப்பதாவது:
''இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையில் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் என் நண்பர் சதீஷ் சென் என்னை இந்திப் படங்களில் நடிக்க முயற்சி செய்ய அறிவுறுத்தினார். அதன்படி இரண்டு படங்களின் ஆடிஷன்களில் கலந்துகொண்டேன். எனினும் அந்த வாய்ப்புகள் எனக்குக் கைகூடவில்லை.
ஒருநாள் சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது, எனக்கு போன் செய்த சதீஷ் , என்னுடைய புகைப்படங்களை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறினார். அதன் பிறகு நடந்த வீடியோ மீட்டிங்கில் என்னிடம் படத்தின் கதை சொல்லப்பட்டது. கதையும் நகலும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் படத்தில் நான் ஒப்பந்தமானேன்''.
இவ்வாறு மஹத் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago