'சபாபதி' படத்தின் மூலம் அறிமுகமாகும் ‘குக் வித் கோமாளி’ புகழ் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சபாபதி'. இப்படத்தில் சந்தானத்துடன் ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், ‘குக் வித் கோமாளி’ புகழ், ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக பாஸ்கர் ஆறுமுகம், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., எடிட்டராக லியோ ஜான் பால் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியுள்ளது படக்குழு. இப்படம் வரும் நவ.19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்பட வெளியீடு குறித்து ‘குக் வித் கோமாளி’ புகழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
» 'புஷ்பா' படத்தில் இணையும் சமந்தா?
» 'எதற்கும் துணிந்தவன்' படக்குழுவுக்குத் தங்கக் காசுகள்: சூர்யா பரிசு
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'' 'சபாபதி' திரைப்படம் நவ.19-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நான் நடித்துள்ள படங்களில் முதலில் திரைக்கு வர உள்ள இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்னைக் காண இருக்கும் எனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்''.
இவ்வாறு புகழ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago