அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பல்வேறு பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமாரின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சமந்தா, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago