நடனப் புயல் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தை நடன இயக்குர் ஹரிகுமார் இயக்கியுள்ளார்.
‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரிகுமார். ‘நரசிம்மா’, ‘பாலா’, ‘இயற்கை’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தை ஹரிகுமார் இயக்கியுள்ளார். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்துக்கு ‘தேள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.
இப்படத்துக்கு பொன்.பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
» இதயங்களை வென்ற காதல்: லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளிய பாலிவுட் நடிகை திருமணம்
» சொல்லி அடித்திருக்கிறார் சிவா: 'அண்ணாத்த' குறித்து ரஜினி பகிர்வு
தற்போது ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் வரும் நவ.19 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தவிர்த்து 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா' உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago