இதயங்களை வென்ற காதல்: லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளிய பாலிவுட் நடிகை திருமணம்

By செய்திப்பிரிவு

பத்தாண்டுகளாகத் தொடர்ந்த பாலிவுட் நடிகையின் காதல், திருமணத்தில் முடிந்த நிலையில் இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருகிறது; லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளியுள்ளது.

பாலிவுட் நடிகை பத்ரலேகா ராவ், இவர் இயக்குனர் ஹன்சல் மேத்தாவின் 'சிட்டிலைட்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகன் ராஜ்குமார் ராவுடன் இணைந்து 2014ல் அறிமுகமானார்.

ராஜ்குமார் ராவ் அதற்கு முன்னதாகவே 2010ல் 'லவ் செக்ஸ் அவுர் தோக்கா' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமாகியிருந்தார். அப்போது பத்ரலேகா விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்துகொண்டிருந்தார். ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா இருவரும் 11 வருட காதல் வாழ்க்கைக்குப் பிறகு நேற்று (நவம்பர் 15) திருமணம் செய்து கொண்டனர்.

"ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா பாலின் காலத்தால் அழியாத காதல் கதையைக் கொண்டாடுகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இடுகை தொடங்குகிறது, பின்னர் பத்ரலேகாவின் பார்வையில் இருந்து காதல் கதையை விவரிக்கிறது.

“நான் அவரை முதன்முறையாக' LSD (லவ் செக்ஸ் அவுர் தோக்கா)இல் பார்த்தேன். அவர் வித்தியாசமான ஒரு இளைஞனாக நடித்திருந்தார். ஆனால் உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் பயந்திருந்ததைப் போல அவர் இல்லை என்று தோன்றியதில் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் இன்னொரு அற்புதமான விஷயம், சினிமாவுக்கு முன்னதாக ஒருவிளம்பரத்தில் என்னை அவர் ஒரு விளம்பரத்தில் பார்த்தபோது, இப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ராஜ்குமார் நினைத்தாராம்.' என்கிறார் பத்ரலேகா.

இப்படியாக தொடரும் இந்தப் பதிவில் சினிமா ஆர்வங்களில் இருவரின் பிணைப்புகள் பற்றி விரிகிறது. இப்பதிவு வெளியான ஒரு மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியது. ஷேர் செய்யப்பட்டபிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமென்ட்களைக் குவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்