‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய ஷைலஜா டீச்சர்

‘ஜெய் பீம்’ படத்துக்கு முன்னாள் கேரள அமைச்சர் ஷைலஜா டீச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகம் தாண்டி மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் ‘ஜெய் பீம்’ படத்துக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘ஜெய் பீம்’ திரைப்படம் மாற்றத்துக்கான ஒரு உத்வேகம். சமூகத்தின் அதிகார வன்முறை மற்றும் சமூக ஒடுக்குமுறையின் நம்பகமான சித்தரிப்பு. அற்புதமான நடிப்பு. ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் என் பாராட்டுகள்''.

இவ்வாறு ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE