‘சபாஷ் மிது’ படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

டாப்ஸி நடித்துள்ள ‘சபாஷ் மிது’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்தது.

பிரபல கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘சபாஷ் மிது’. இப்படத்தில் மிதாலி ராஜ் பாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை முதலில் இயக்கி வந்தவர் ராகுல் டோலக்யா. தனிப்பட்ட காரணங்கள் அவர் இப்படத்திலிருந்து விலகவே ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்குகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பை தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னல் கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. இதனை டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது ‘எனக்கு 8 வயது இருக்கும்போது, ஒருநாள் கிரிக்கெட் ஆண்களுக்கான விளையாட்டாக இருக்காது, நமக்கென்று ஒரு அணியும், ஒரு அடையாளமும் கூட கிடைக்கும் என்று ஒருவர் என்னிடம் கூறினார். நாங்கள் விரைவில் வருகிறோம். ‘சபாஷ் மிது’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. 2022 உலகக் கோப்பை ஆட்டத்தை கொண்டாட தயாராவோம்.’ என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்ததாக டாப்ஸி ‘லூப் லடேபா’,‘டொபாரா’, ‘ப்ளர்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்