விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘சலீம்’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம பாகம் உருவாகி வருகிறது. ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார். நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளர். இவர்களுடன் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் ‘சலீம்’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago