'சாணிக் காயிதம்' படத்தில் இசையமைக்க சாம்.சி.எஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். சமீபத்தில் இவர் இயக்கி முடித்துள்ள படம் 'சாணிக் காயிதம்'. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 80களில் நடப்பது போன்ற் கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இறுதிகட்ட பணிகளுக்குப் பிறகு விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இப்படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது பெயரும் ஆரம்பத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றது.
இந்நிலையில் 'சாணிக் காயிதம்' படத்தில் தற்போது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக பிரத்யேகமாக ஒரு போஸ்டரை வெளியிட்டு ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. அந்த போஸ்டரை சாம் சி.எஸ் தனது ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
» இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு
இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..!
Happy to work with a talented team of #Saanikaayidham
Tnkq so much @arunmatheswaran @Screensceneoffl @sidd_rao @selvaraghavan @KeerthyOfficial @yaminiyag @ramu_thangaraj @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss https://t.co/BAl05ZQ6tt pic.twitter.com/YE7rFYWTvH—
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago