சுந்தர்.சி இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜீவா நடிக்கவுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அரண்மனை 3'. அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், வசூல் ரீதியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
'அரண்மனை 3' படத்துக்குப் பிறகு தனது புதிய படத்தை முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி. இதில் நாயகனாக ஜீவா, நாயகியாக ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இவர்களுடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்கு முன்பாக சுந்தர்.சி - ஜீவா கூட்டணி 'கலகலப்பு 2' படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. அதற்குப் பிறகு இணையும் படமாக இது உருவாகவுள்ளது. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகவுள்ளது.
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் பூஜையுடன் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago