ஓடிடியில் வெளியாகிறதா 'எஃப்.ஐ.ஆர்'? - விஷ்ணு விஷால் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஓடிடியில் 'எஃப்.ஐ.ஆர்' வெளியாக உள்ளதாக உருவான செய்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிவுற்றது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் சமீபத்தில் 'எஃப்.ஐ.ஆர்' படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக வரும் செய்தி தவறானது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை தயவுசெய்து காத்திருக்கவும்.

நான் எப்போதும் சொல்வதைப் போல, ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிட என்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன். ஒரு மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்துக்காக நாங்கள் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்