இது பதவி அல்ல பொறுப்பு என்று உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்களிடம் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரைக் கடந்த 25-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு விஜய் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
அன்றைய தினம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரையும் தனித்தனியாகப் பாராட்டினார். ஆனால், வெற்றியாளர்களிடம் விஜய் என்ன பேசினார் என்பது இதுவரை வெளியே தெரியாமல் இருந்தது.
வெற்றியாளர்களிடம் விஜய் பேசியது குறித்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை அன்று விஜய் நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது "பதவி" அல்ல "பொறுப்பு" என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்"
இவ்வாறு புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago