வதந்திகளை நம்பவேண்டாம்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர்

By செய்திப்பிரிவு

ரஜினி உடல்நிலைக் குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28.10.21) இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்று ரஜினியின் மனைவி லதா தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ரஜினியின் உடல்நிலைக் குறித்து பல்வேறு தகவல்கள், செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே, ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியான சுதாகர் தனது ட்விட்டர் பதிவில் ரஜினியின் உடல்நிலை குறித்து "தலைவர் நலமாக இருக்கின்றார் , வதந்திகளை நம்பவேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு ரஜினி ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்