பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற ரஜினிகாந்த்

By செய்திப்பிரிவு

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றுள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த். அன்றைய தினத்தில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகின.

இதனிடையே, அன்றைய தினத்திலேயே பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், "மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

மேலும்