ஆர்யாவுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

ஆர்யா நடித்துவரும் புதிய படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'சார்பட்டா பரம்பரை', 'அரண்மனை 3' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் ஆர்யா. ஆனால், பல்வேறு கதைகளைக் கேட்டு வருகிறார். இதில் சக்தி செளந்தர்ராஜன் கதையில் நடித்து, தயாரிக்க முன்வந்தார் ஆர்யா. இதற்கு முன்பாக 'டெடி' படத்தில் இந்தக் கூட்டணி இணைந்து தயாரித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 25) சென்னையில் சக்தி செளந்தர்ராஜன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் சிம்ரன், தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படம் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக இமான், எடிட்டராக பிரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்