'ஜெயில்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது 'ஜெயில்' படத்தைப் பார்த்துவிட்டு, அதன் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். முன்னணி நிறுவனம் உரிமையைக் கைப்பற்றி இருப்பதால் 'ஜெயில்' படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு. மேலும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக அறிமுகமான 'டார்லிங்' படத்தைத் தயாரித்தது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் - ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைந்துள்ள படம் 'ஜெயில்' என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
53 secs ago
சினிமா
51 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago