தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மா சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு இருந்ததாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் நடந்தது. இதில் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையை முன்வைத்து பிரகாஷ்ராஜ், மா அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். மேலும், பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.

இந்நிலையில் மா சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு இருந்ததாக பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் அலுவலர் கிருஷ்ணா மோகனைக் குறிப்பிட்டுத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''அன்புள்ள தேர்தல் அலுவலர் கிருஷ்ணா மோகன், இது வெறும் தொடக்கம்தான். சிசிடிவி காட்சிகளை எங்களிடம் கொடுங்கள். என்ன நடந்தது, எப்படி தேர்தல் நடைபெற்றது என்று உலகத்துக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

நாங்கள் ஏற்கெனவே உங்களிடம் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகளைக் கேட்டிருந்தோம். நீங்கள் எங்களுக்கு விளக்கம் அளிக்கத் தவறிவிட்டீர்கள். தேர்தல் அன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகரான சாம்ப சிவராவ், வாக்குப் பதிவு மையத்தில் நின்று கொண்டிருந்ததற்கான ஆதாரம் இதோ. எங்களுக்கு பதில் தேவை''.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE