சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை; சூர்யா பதில்: வாழ்த்திய ரஜினி ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை நிலவி வந்த நிலையில், சூர்யா பதிலளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல உள்ளிட்ட பட்டங்கள் அனைத்துமே வேறொருவர் உபயோகித்தால் சர்ச்சையாகி வரும். சமீபத்தில் கூட சிலம்பரசன், தனுஷ் உள்ளிட்டோர் தோனியைத் தல என்று குறிப்பிட்டதற்காக அஜித் ரசிகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், மோசமான வகையில் ஹேஷ்டேகுகளை உருவாக்கி ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையில் சிக்கினார் சூர்யா. தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 22-ம் தேதி 'ஜெய் பீம்' ட்ரெய்லர் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பில் சூப்பர் ஸ்டார் சூர்யா என்று குறிப்பிட்டது அமேசான் நிறுவனம். இது செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் கோபமடைந்தார்கள். சிலர் சூர்யாவைத் திட்டவும் தொடங்கினார்கள்.

இதனிடையே, 'ஜெய் பீம்' ட்ரெய்லர் வெளியீடு இணையம் வழியே நடைபெற்றது. இதில் சூர்யா கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் சூர்யா என்று குறிப்பிட்டார். "எனக்கு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி சார் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் எங்களுக்கு" என்று சூர்யா தெரிவித்தார்.

இந்த வீடியோ பதிவு மட்டும் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து, 'ஜெய் பீம்' படத்துக்கு வாழ்த்து தெரிவித்துப் பகிர்ந்து வருகிறார்கள். 'ஜெய் பீம்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டு, 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் சூர்யா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்