அடுத்ததாக 'அப்பா 2' படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் சமுத்திரக்கனி.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அப்பா'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. குறைந்த முதலீடு என்பதால்,விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது. தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை முன்வைத்து இந்தப் படத்தை இயக்கி, நடித்திருந்தார் சமுத்திரக்கனி.
சமீபத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் 'விநோதய சித்தம்'. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது, 'அப்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சமுத்திரக்கனி. 'அப்பா 2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் சமுத்திரக்கனி.
'அப்பா 2' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago