தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகிறது எம்.ஜி.ஆர் மகன்

By செய்திப்பிரிவு

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'எம்.ஜி.ஆர் மகன்' தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பொன்.ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்.ஜி.ஆர் மகன்'. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.

காமெடியை களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் 95% காட்சிகள் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படமாக்கி முடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சரியான வெளியீட்டுத் தேதிக்காக படக்குழு காத்திருந்தது. ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் வெளியாகி வருவதால் சரியான தேதி அமையவில்லை.

இறுதியாக தீபாவளி வெளியீடாக ஓடிடிக்கு கொடுத்துவிட்டது படக்குழு. நவம்பர் 4-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது 'எம்.ஜி.ஆர் மகன்'. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், இசையமைப்பாளராக அந்தோணி தாசனும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE