ரீமிக்ஸ் செய்யப்படும் 'பாடாத பாட்டெல்லாம்' பாடல்

By செய்திப்பிரிவு

லாரன்ஸ் நடித்து வரும் 'ருத்ரன்' படத்துக்காக 'பாடாத பாட்டெல்லாம்' பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது.

கதிரேசன் தயாரித்து, இயக்கி வரும் படம் 'ருத்ரன்'. இதில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்காக 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற 'பாடாத பாட்டெல்லாம்' பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார்கள். 1962-ம் ஆண்டு வெளியான இந்தப் பாடல் மிகவும் பிரபலம். பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ்.ஜானகி இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தார்கள்.

மக்கள் மத்தியில் பிரபலமான இந்தப் பாடலை, தற்போதுள்ள காலத்துக்கு ஏற்றவகையில் ரீமிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தப் பாடலுக்காகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்துக் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு. இதற்கு நடன இயக்குநராக ஸ்ரீதர் பணிபுரிந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்