'டெடி' இயக்குநருக்கு விலையுர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் மார்ச் 12-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. ஹாட்ஸ்டார் ஓடிடி பார்வையாளர்கள் மத்தியிலும் இந்தப் படம் பேசப்பட்டது. மேலும், இந்தியிலும் 'டெடி' படத்தினை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, 'டெடி' இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனுக்கு விலையுர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார் ஞானவேல் ராஜா. இந்தப் பரிசு தொடர்பாக சக்தி செளந்தர்ராஜன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"'டெடி' என்றுமே எனக்கு விசேஷமான ஒரு படமாக இருக்கும். அதை இன்னும் விசேஷமானதாக்கிய உங்களின் இந்த செயலுக்கு நன்றி ஞானவேல்ராஜா அவர்களே. உங்கள் சிந்தனைகளும், செயல்களும் என்றுமே பெரிதாக, தாராள மனதோடு இருந்திருக்கின்றன"
இவ்வாறு சக்தி செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
'டெடி' படத்துக்குப் பிறகு, மீண்டும் ஆர்யா - சக்தி செளந்தர்ராஜன் கூட்டணி இணைகிறது. இந்தப் படத்தினை ஆர்யாவே தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago