‘தி பேமிலி மேன் 2’ தொடரைத் தொடர்ந்து மற்றொரு வெப் சீரிஸில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இறுதியாக இந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க சம்ந்தாவின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தொடரை ‘ஆஹா’ நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இது தவிர்த்து சாந்தரூபன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படங்களை முடித்துக் கொடுத்து விட்டு வெப் சீரிஸுக்கான தேதிகள் ஒதுக்குவார் என்று தெரிகிறது.
ஏற்கெனவே ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் சமந்தா நடித்திருந்தா ராஜி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago